Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

முதியவருக்கு கத்திக்குத்து: வாலிபர் மீது வழக்கு

பண்ருட்டி, ஜூலை 3: பண்ருட்டி அருகே உள்ள சாத்திப்பட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த புஷ்பராஜ்(61). நேற்று முன்தினம் சாத்திப்பட்டு நான்குமுனை சந்திப்பு சாலையில் உள்ள கடையில் டீ குடித்துவிட்டு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த நடுசாத்திப்பட்டைச் சேர்ந்த அக்கீஸ்(30) என்பவர் புஷ்பராஜை அவதூறாக திட்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கியுள்ளார்.இந்த தாக்குதலில் புஷ்பராஜ்க்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அப்போது அக்கீஸ், எப்போது இருந்தாலும் உன் குடும்பத்தை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து புஷ்பராஜை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து புஷ்பராஜ் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ்பெக்டர் திவாஸ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.