Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்

பண்ருட்டி, ஜூலை 3: பண்ருட்டி அருகே உள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பழனி(64). இவர் காட்டாண்டிகுப்பம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று பழனி பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது காட்டாண்டிகுப்பத்தைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் வரிசையில் வராமல் குறுக்கே வந்து பெட்ரோல் போடச் சொல்லியுள்ளார்.அதற்கு பழனி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரமேஷ், அவரை அவதூறாக திட்டி கையால் கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும் அங்கிருந்த இரும்பு சேரை கையில் எடுத்து கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இது குறித்து பழனி காடாம்புலியூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.