Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வீராணம் ஏரியில் மர்ம நபர்கள் தீ வைப்பு

காட்டுமன்னார்கோவில், ஜூன் 2: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. நேரத்தில் லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரி பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள நாணல் புதர்கள் மற்றும் செடி, கொடிகள் தீப்பிடித்து மளமளவென எரிந்தன. இந்த தீ விபத்தால் ஏரி பகுதியில் வசித்து வந்த பறவைகள் மற்றும் சிறு வன உயிரினங்கள் அச்சமடைந்து தப்பியோடின.

இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஏரியில் உள்ள நாணல் மற்றும் செடி, கொடிகளில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து ஒரு மணிநேரம் போராடி அணைத்தனர். இதனால் ஒரு கிலோ மீட்டர் தூரம் வீராணம் ஏரி காடுகள் எரிந்து சாம்பலானது. வீராணம் ஏரியில் தீ வைத்த நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.