Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

வருமான வரித்துறை ஒப்பந்த ஊழியரிடம் 17 பவுன் தங்க நகைகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை

தவளக்குப்பம், ஆக. 1: புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தனியார் விடுதியில் தங்கியிருந்த வருமான வரித்துறை ஒப்பந்த ஊழியரின் கைப்பையில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான 17 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, லாஸ்பேட்டை, கென்னடி கார்டன் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ மனைவி மலர்கொடி (44). இவர் புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வருகிறார். இவரது உறவினரின் திருமணம் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோயிலில், கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு இவரது கணவர் இளங்கோவுடன் மலர்கொடியும் சென்றிருந்தார்.