Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த புதுவை மூதாட்டி பலி

விழுப்புரம், ஆக. 1: விழுப்புரம் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார். புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்தவர் அஞ்சலாட்சி(80). இவர் விழுப்புரம் அருகே பூத்தமேட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குப்புசாமி என்பவரது நிலத்திற்கு அஞ்சலாட்சி சென்றபோது வயதுமுதிர்வு காரணமாக நிலைதடுமாறி விவசாய கிணற்றில் தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரது சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.