Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

புவனகிரியில் லாரியில் சவுடு மண் கடத்தல்: டிரைவர் கைது

புவனகிரி, ஜூலை 1: புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் புவனகிரியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் சவுடு மண் ஏற்றி வந்தது தெரிந்தது.

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வாங்கிய பர்மிட்டை வைத்துக் கொண்டு, கடலூர் மாவட்டத்திற்கு மண் எடுத்து வந்ததும் தெரிந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரான சீர்காழி தாலுகா ஏத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (36) என்பவரை கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.