Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

போதையில் ரகளை செய்த 3 பேர் கைது

புதுச்சேரி, ஜூலை 1: புதுச்சேரி கோரிமேடு போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தட்டாஞ்சாவடி காமராஜ் சாலை விவிபி நகர் ஆர்ச் அருகே பொது இடத்தில் ஒரு நபர் மது குடித்து விட்டு, பொதுமக்களிடம் ரகளை செய்து கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரை சேர்ந்த சங்கர் (54) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

அதேபோல், புதுச்சேரி சுய்ப்ரேன் வீதி- சுப்பையா சாலை சந்திப்பில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட விழுப்புரத்தை சேர்ந்த பிரவீன்குமார் (35) என்பவரை ஒதியஞ்சாலை போலீசார் கைது செய்தனர். மேலும், ரெட்டியார்பாளையத்தில் கனகன் ஏரி அருகே குடிபோதையில் ரகளை செய்த உழவர்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் (34) என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்்.