Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கிரேன் டயரில் சிக்கி தொழிலாளி பலி

தண்டையார்பேட்டை: சென்னை துறைமுக வளாகத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கிரேன் யார்டு பகுதியில் உள்ள கன்டெய்னரை சரக்கு ரயிலுக்கு மாற்றும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது, கன்டெய்னர் செக்கர் பணியில் இருந்த விழுப்புரம் மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த பாலமுருகன் (24) என்பவர், கன்டெய்னரை சோதிப்பதற்காக கிரேனுக்குப் பின்னால் சென்றார்.

இதனை கவனிக்காத ஆபரேட்டர் கிரேனை இயக்கியபோது, எதிர்பாராத விதமாக கிரேனின் பின்பக்க டயரில் சிக்கி பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த துறைமுகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.