அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு
பரமத்திவேலூர், நவ.30: பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் பேரூராட்சி சார்பில் 75வது இந்திய அரசியலமைப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement