சாயல்குடியில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
சாயல்குடி, அக்.7: சாயல்குடி காங்கிரஸ் கட்சியினர் சார்பில், தேசிய விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. சாயல்குடி நகர் காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேசிய விழிப்புணர்வு நடை பயணம் நடைபெற்றது. நகர் தலைவர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
Advertisement
இந்த நடை பயணத்தில் ஒன்றிணைவோம், மத நல்லிணக்கத்தை போற்றுவோம். பாஜக, ஆர்.எஸ்.எஸ், வெறுப்பு அரசியலை முறியடிப்போம் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த நடைபயணம் சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வி.வி.ஆர்.நகர் காமராஜர் சிலையில் இருந்து சாயல்குடி பஸ் நிலையம் வரை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் கடலாடி வட்டார தலைவர் சுரேஷ்காந்தி, கமுதி வட்டார தலைவர் பழக்கடை ஆதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisement