சிவகங்கை, நவ.21: சிவகங்கை அருகே குமாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர் சேர்க்கை, ஆங்கில வழியில் எண்ணும் எழுத்தும் பயிற்று முறை உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருது மற்றும் கேடயம் பள்ளி கல்வித்துறை அமைச்சரால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளி தலைமையாசிரியர் செல்வமலர், உதவி ஆசிரியர்கள் சந்திரலேகா, ஆரோக்கியஜெஸி, ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், மேலாண்மைக்குழு நிர்வாகிகள், கிராமத்தினர் கலெக்டர் ஆஷாஅஜித்தை சந்தித்து கேடயத்தை வழங்கி வாழ்த்து பெற்றனர். தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து மற்றும் கல்வித்துறை அலுவலர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
+
Advertisement


