ஈரோடு, ஆக. 29: ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் சம்பத் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில நிர்வாகி ஜெயலட்சுமி பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். அகவலைப்படி, மருத்துவப்படி, இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். இலவச இறப்பின்போது குடும்ப நல நிதி ரூ.50 ஆயிரமாக வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் ஆகியவை வழங்க வேண்டும். இதனை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


