பெ.நா.பாளையம், செப்.25: கோவை துடியலூர் அடுத்துள்ள பழனி கவுண்டன்புதூர் பிரியங்கா நகரில் வசிப்பவர் மூர்த்தி என்பவரின் மகன் சுரேந்திரன் (45). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். இவர் 23ம் தேதி வடமதுரையில் இருந்து பன்னீர் மடைக்கு சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த எஸ்.எம்.பாளையம் ஜல்லிக்கோரையை சேர்ந்த நாகராஜின் மகன் கோழி என்கிற கோபிநாத் (36) என்ற ஆட்டோ டிரைவர் கத்தியை காட்டி சுரேந்திரனை தடுத்து நிறுத்தியுள்ளார்.
தனக்கு மது அருந்த பணம் வேண்டும் என மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி அவரிடம் இருந்து ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளார். இதுகுறித்து சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் ஆட்டோ டிரைவர் கோபிநாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


