Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெரியார் அறிவுலகம் பணிகள் விரைவில் நிறைவு 1.25 லட்சம் புத்தகங்களுக்கு காத்திருப்பு

கோவை,ஜூன்19: கோவை காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பெரியார் அறிவுலகம் கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 90 பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டு வருகிறது. முதல் தளத்தில் அறிவியல் மையம் 2வது தளத்தில் சிறுவர் நூலகம், சுய வாசிப்புப் பிரிவு மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் 4வது தளத்தில் தமிழ் புத்தகங்களும் பருவ இதழ்களும் கொண்ட பகுதி 5 மற்றும் 6 வது தளத்தில் ஆங்கில புத்தகப் பிரிவு, புத்தாக்க மையங்களும் தயார் செய்யும் பணி நடக்கிறது.

7வது தளத்தில் அறிவியல் மையம், எண்ணிம நூலகம் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.