Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாநகர போக்குவரத்து போலீசாரின் சிறப்பு சோதனையில் 56 பஸ்களில் ஏர் ஹார்ன்கள் பறிமுதல்

கோவை,ஆக.10:மாநகர போக்குவரத்து போலீசாரின் சிறப்பு சோதனையில் 56 ஏர் ஹார்ன்கள், 370 லைட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் இணைந்து கடந்த சில நாட்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.சோதனையின் போது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹார்ன்களின் ஒலி அளவு டெசிபெல் மீட்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக சத்தம் எழுப்பிய 56 பஸ்களில் ஏர் ஹார்ன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல அதிக ஒளி கொண்ட 370 லைட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிக பாரம் ஏற்றி வந்த 14 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.