கோவை, செப்.5: கோவை நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் ஆசிரியர் தினத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.விழாவில், கோவை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சதீஷ் கலந்து கொண்டு, உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு ஆசிரியர் நிச்சயம் இருப்பார்கள்.
ஆசிரியர்கள் என்பவர்கள் எப்போதும் சரியான திசையை மட்டுமே காண்பித்து, வழிநடத்தக் கூடியவர்கள். இந்த நன்னாளில் ஆசிரியர்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதில், கல்லூரி அக மதிப்பீட்டு தர நிர்ணய மைய ஒருங்கிணைப்பாளர் பர்வின் பானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


