கோவை மாநகராட்சி நகர்நல அலுவலர் நியமனம்
Advertisement
கோவை, அக். 14: பொது சுகாதாரத்துறை சார்பில் மாநகராட்சி, நகராட்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கவுன்சலிங் முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியில் நகர்நல அலுவலர் பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து, மாநகராட்சி உதவி நகர்நல அலுவலர் பூபதி, மாநகராட்சி நகர்நல அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து பணிகளை கவனித்து வந்தார். தற்போது, சென்னை பொது சுகாதாரத்துறையில் தொற்றுநோயியில் துறையில் சுகாதார அலுவலராக பணியாற்றி வந்த மோகன், கோவை மாநகராட்சி நகர்நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், விரைவில் பொறுப்பேற்பார் என தெரிகிறது.
Advertisement