Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெரியநாயக்கன்பாளையம் அருகே குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டாசில் கைது

பெ.நா.பாளையம், செப்.21: பெரியநாயக்கன்பாளையம் அருகே குற்றச்செயல்களில் ஈடுபட்ட 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் பிரதீப்குமார் (34). ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி சாமநாயக்கன்பாளையம் பூங்காநரை சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் அவரது நண்பர்கள் கார்த்தி (44), ஹரிகிருஷ்ணா (23), மதுரை சிவா (24) ஆகிய 4 பேர் பிரதீப்குமாரை சராமாரியாக அடித்ததில் பலத்த காயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனையடுத்து 4 பேர்களையும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஏற்கனவே பல குற்ற செயல்களில் ஈடுபட்ட சபாபதி என்பவரின் மகன் பிரகாஷ் (26), பூபதி என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணா (23) ஆகியோர் மீது கோவை மாவட்ட எஸ்.பி பவன்குமார் ரெட்டி பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில் அவர்கள் 2 பேர்களையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.