Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

அடித்து கொடுமைப்படுத்தியதால் குழந்தை பலி; தாய்க்கு 3 ஆண்டு சிறை

கோவை, ஆக.19: கோவை கரும்புக்கடையை சேர்ந்தவர் தில்ஷாத் பானு (32). இவருக்கு 3 குழந்தைகள் இருந்தன. 3வதாக பிறந்த இவரது 2 வயது ஆண் குழந்தை வீட்டின் மாடி படியில் இருந்து விழுந்து காயமடைந்தது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பிரேத பரிசோதனையில், அந்த குழந்தையின் உடலில் ஏற்கனவே பல இடங்களில் காயம் இருந்ததும், குழந்தையை தாய் தில்ஷாத் பானு கொடுமைப்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து கடந்த 2022ம் ஆண்டு போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், தில்ஷாத் பானு குழந்தையை அடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தில்ஷாத் பானுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜ், குழந்தையின் தாய் தில்ஷாத் பானுவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 1,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.