Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கோவையில் ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

ேகாவை, டிச.16:தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப் பெற்ற 27-12-1956ம் நாளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சி மொழிச் சட்ட வாரம் கொண்டாட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் நாளை முதல் (17ம் தேதி) வரும் 26ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு ஆட்சி மொழிச் சட்டவாரம் கொண்டாடப்படும். ஆட்சிமொழிச் சட்டவார விழாக்கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக அரசுப் பணியாளர்களுக்குக் கணினித்தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம்,ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள் வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெறும்.

தமிழ்நாடு அரசு வாரியங்கள்,கழகங்கள்,அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள்,பணியாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழமைப்புகள்,தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர்கள், வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்டவார விழா நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.