Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக.22ல் வேலை வாய்ப்பு முகாம்

கோவை, ஆக.14: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22ம் தேதி காலை 8 மணியளவில் ஈச்சனாரியில் ரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும்.

உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனை, மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்காக 15000 காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியாளர்கள் என அனைத்து பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. மேலும், அனுமதி முற்றிலும் இலவசம்.

இம்முகாமிற்கு வருகை புரியும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்கள் கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலைநாடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் candidate login ல் விவரங்களை பதிவு செய்தல் (https://youtu.be/urD7KDTpyjA?si=x5YC4RMoq4xDBvHH) வேண்டும். மேலும் விவரங்களுக்கு மனுதாரர்கள் 0422-2642388, 9499055937 என்ற எண்ணில் கொள்ளலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தினர் தெரிவித்தனர்.