மதுக்கரை, ஆக.14: மதுக்கரை அருகே எட்டிமடையை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சபரி ஐயப்பன், இவர், திருமலையாம் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளியில் பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்ததன் காரணமாக, சில மதங்களுக்கு முன்பு பள்ளி நிர்வாகத்தினர் வேலையை விட்டு நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில், மது போதையில் பள்ளிக்கு சென்ற சபரி ஐயப்பன், அங்கு நிறுத்தியிருந்த பஸ்சை திருடி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கே.ஜி.சாவடி போலீசார், சபரி ஐயப்பனை கைது செய்து, பேருந்தை மீட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
+
Advertisement



