கோவை, ஆக. 13: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நான்கரை கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வழக்கில் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாத் (24) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிரசாத் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட எஸ்பி பவன்குமார் ரெட்டி, பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், பிரசாத் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்படி சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரசாத்தை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள், கோவை மாவட்ட போலீசாரின் நிழல் என்ற கியூ ஆர் கோடு அடிப்படையிலான பாதுகாப்புத் தளத்தைப் பயன்படுத்தி, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல்களை பகிரலாம் என போலீசார் தெரிவித்தனர்.



