கோவை, ஆக.12:கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் நடைபெற்றது. கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடந்த மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், செயின்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டு 19 தங்கம், 29 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 50 பதக்கங்களை வென்று, 184 புள்ளிகளை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை 57 புள்ளிகளுடன் செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியும், 48 புள்ளிகளுடன் ஸ்டேன்ஸ் பள்ளி மூன்றாவது இடத்தையும், 37 புள்ளிகளுடன் செயின்ட் ஹில்டாஸ் பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஸ்டேன்ஸ் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் பரிசுகள் மற்றும் பாராட்டுகளை வழங்கினார்.



