புதுக்கோட்டை கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினர் இடையே மோதல்: இன்ஸ்பெக்டர் மண்டை உடைப்பு
புதுக்கோட்டை, மார்ச்.18: புதுக்கோட்டையில் கும்பாபிஷேக விழாவில்.இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் இன்ஸ்பெக்டர் மண்டை உடைந்தது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவிலூர் பாலபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில நேற்று இரவு அக்கோயிலில் இரு தரப்பினிடையே ஏற்பட்ட பிரச்சனையை விலக்கச் சென்றுள்ளார் ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் சிவசுப்பிரமணின் அங்கு நடந்த தாக்குதலில் ஆய்வாளர் சிவசுப்பிரமணியனின் மண்டை உடைந்தது.
இதனையடுத்து, காயமடைந்த சிவசுப்பிரமணியன் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், ஆய்வாளர் சிவசுப்பிரமணின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆலங்குடி அருகே கோவிலூர் பகுதி முழுவதும், புதுக்கோட்டை எஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கோயிலில் கூடியிருந்த இரு தரப்பினரையும் அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.