Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோயிலுக்கு சொந்தமான 9 கடைகள் அதிரடியாக மீட்பு:அறநிலையத்துறை தகவல்

சென்னை: தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ. 1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள 1738 சதுர அடி மனையில் வணிக வளாகம் கட்டப்பட்டு அதில் 9 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் நீதிமன்ற உத்தரவின்படி, உதவி ஆணையர் பாரதிராஜா தலைமையில் காவல்துறையினரின் உதவியுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டு, கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.67 கோடி ஆகும். இந்நிகழ்வின்போது தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், கோயில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வாளர் மணி மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.