Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தையின் செல்போனுக்கு ஈர கையால் சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவி பலி: எர்ணாவூரில் பரிதாபம்

திருவொற்றியூர்: ஈர கையுடன், தந்தையின் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் பாய்ந்து மாணவி உயிரிழந்த சம்பவம், எண்ணூரில் சோகத்தை ஏற்படுத்தியது. எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் முகுந்தன். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி விஜயா. இவர்களது மகள்கள் அனிதா (14), எழில்மதி (7). அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அனிதா 10ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு விஜயாவும், எழில்மதியும் மளிகை கடைக்கு சென்றதால் அனிதா மட்டும் வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஈரமாக இருந்த கையுடன் தனது தந்தையின் செல்போனுக்கு சார்ஜ் போட்டபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை முகுந்தன் ஓடிவந்து, மகள் அனிதாவை மீட்டு உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அனிதா இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதுகுறித்த புகாரின்படி, எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அனிதாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.