Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மின் கம்பி அறுந்து வாலிபர் உயிரிழப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (27). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கலைவாணி (27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். தற்போது கலைவாணி கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.  நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே உள்ள கடைக்கு விக்னேஷ் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை தேடியபோது, சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை, விக்னேஷ் தெரியாமல் மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரிந்தது.

உடனடியாக மின் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, விக்னேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரிந்தது. தகவலறிந்து வந்த அம்பத்தூர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.