Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் உரிமை கோராத 5,543 வாகனங்கள் பறிமுதல்

சென்னை, ஆக.29: சென்னை மாநகர காவல் எல்லையில் பல மாதங்களாக சாலையோரம் நிறுத்தப்பட்டு, கேட்பாரற்று மற்றும் உரிமை கோராத 5,543 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி இந்த வாகனங்கள் ஏலம் விடுவதற்காக, சென்னை மாநகராட்சி கமிஷனரிடம் கலந்தாலோசித்து ஒப்படைக்கப்பட்டது. அதில் 1,936 வாகனங்கள் சென்னை மாநகராட்சி மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டு மின்னணு ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

அதன்படி நேற்று பரங்கிமலை காவல் மாவட்டத்தில் 180 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. வரும் 31ம் ேததி கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் 362 வாகனங்களும், வரும் 2ம் ேததி திருவல்லிக்கேணி காவல் மாவட்டத்தில் 522 வாகனங்களும், வரும் 7ம் ேததி வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 592 வாகனங்களும், வரும் 9ம் தேதி கொளத்தூர் காவல் மாவட்டத்தில் 98 வாகனங்களும், வரும் 11ம் தேதி பூக்கடை காவல் மாவட்டத்தில் 182 வாகனங்கள் என மொத்தம் 1,936 வாகனங்கள் ஏலம் விடப்படுகிறது. மீதமுள்ள 3,607 வாகனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மின்னணு ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.