Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆக்சிஜன் கட்டிங் மிஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் துணிகர கொள்ளை

சென்னை, ஆக.28: ஆக்சிஜன் கட்டிங் மிஷின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட சர்வீஸ் சாலையில் தனியாருக்கு சொந்தமான 2 வங்கிகளின் ஏடிஎம்கள் இயங்கி வருகின்றன. நேற்று காலை 11 மணியளவில் ஜிதேந்திர குமார் என்ற வட மாநில இளைஞர் இங்குள்ள ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது, ஏடிஎம் இயந்திரம் உடைந்து கிடந்தது.

இதனை அறிந்த பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை ஆய்வு செய்தனர். அதில், ஆக்சிஜன் கட்டிங் இயந்திரத்தின் முலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடுத்து சென்றது தெரியவந்தது. அருகே இருந்த மற்றொரு வங்கியின் ஏடிஎம் மையத்திலும் கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது.

ஏடிஎம் மையத்தின் அருகே இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, 2 நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரும்புதூர் பகுதியில் நடந்த ஏடிஎம் மையம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதே நபர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.