Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாப்பூரில் அரசு நிலம் 6.2 கிரவுண்டு மீட்பு

சென்னை, ஜன.22: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, மயிலாப்பூர் வட்டம் நந்தனம், பிளாக் எண்.77 புல எண்.3884/4-ல் உள்ள 6.2232 கிரவுண்டு பரப்பளவு கொண்ட புலத்தின் ஒரு பகுதியில், ஆதி திராவிடர் நல விடுதி 1958ம் ஆண்டுக்கு முன்பிருந்தே செயல்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து, கொடுங்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டு வந்தது. தனிநபர் ஒருவர், இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடியும், அரசு பழங்குடியினர் பள்ளியை உடனடியாக காலி செய்து, நிலத்தினை ஒப்படைக்குமாறு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்குகள் தொடுத்தார். தமிழக அரசு இந்த வழக்குகளில், உரிய ஆதார ஆவணங்களுடன் எதிர்வாதுரைகள் தாக்கல் செய்தும், நிலமானது பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துரைத்து வந்தது. தனிநபர் தொடுத்த வழக்கினை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதைதொடர்ந்து, தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு இந்த நிலமானது பழங்குடியினர் நலத்துறைக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் முற்றிலும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.