Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் சிக்கினர்

பல்லாவரம், ஆக.21: அனகாபுத்தூர், சுடுகாடு அருகே கஞ்சா விற்பதாக, சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கிருந்த வாலிபர்களை பிடித்து, அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் சிறு சிறு பொட்டலங்களாக ஒன்றரை கிலோ கஞ்சா இருந்தது.

விசாரணையில், பல்லாவரம், யாசின்கான் தெருவை சேர்ந்த முகமது அசாருதீன் (32), பொழிச்சலூர், பாரதி நகரை சேர்ந்த ராபின்குமார் (25), பம்மல் நாகல்கேணி, காந்தி நகரை சேர்ந்த முகமது அஸ்ரப் (27), அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்த வினித் (25) என்பதும், இவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து, புறநகர் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவர்களை கைது செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.