ஆலந்தூர், ஆக.21: ஆதம்பாக்கம் கருணீகர் தெருவில் இடியாப்ப கடை நடத்தி வருபவர் அழகர்சாமி (33). நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு போதையில் பைக்கில் வந்த 2 பேர், அழகர்சாமியிடம் ரூ.500 கேட்டுள்ளனர். அவர் தரமறுத்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் அழகர்சாமியின் தலையில் பலமாக தாக்கி, கல்லாப்பெட்டியில் இருந்த 4470 ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பினர்.
படுகாயமடைந்த அழகர்சாமியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



