Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருமணம் செய்து வைக்காததால் தாயின் மண்டையை உடைத்த மகன் கைது

பெரம்பூர், ஆக.20: திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரமடைந்து தாயின் மண்டையை உடைத்த மகனை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி சஞ்சய் நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் நிஷா நிர்மல்குமாரி(48). இவர் மாதவரத்தில் உள்ள தனியார் மொத்த விற்பனை கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அஜித் குமார்(30). இந்நிலையில், கடந்த 16ம் தேதி நிஷா நிர்மல்குமாரி வேலை முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது அஜித்குமார் கஞ்சா போதையில் தனது தாயாரிடம் தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் தோசை கரண்டியால் நிஷா நிர்மல்குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த நிஷா நிர்மல்குமாரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நிஷா நிர்மல்குமாரி எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து அஜித்குமாரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.