சென்னை, ஆக.20: தமிழக காவல்துறையில் லஞ்சம் வாங்கும் போலீசார் மீது புகார் அளிக்கும் வகையில், அனைத்து மாவட்ட எஸ்பி அலுவலகங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களில் ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு எதிரான ஊழல், முறைகேடு, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்களை தடுப்பது, கண்காணிப்பது மற்றும் இது தொடர்பான புகார்களை விசாரணை செய்வது இப்பிரிவுகளின் முக்கிய நோக்கமாகும்.
இதுபோன்ற புகார்களை பொதுமக்கள் எளிதில் தெரிவிக்கும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’க்கு என தனியாக செல்போன், வாட்ஸ்அப் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அவர்களது அடையாளங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். என டிஜிபி அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.



