Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

செல்போன் கடையில் பதுக்கிய 20 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

மாதவரம், ஆக.20: மாதவரத்தில் செல்போன் கடையில் பதுக்கிய 20 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து கடையின் உரிமையாளரை கைது செய்தனர். மாதவரம் எம்ஆர்எச் ரோடு பஜார் அருகே அசோ(35) என்பவருக்கு சொந்தமான செல்போன் விற்பனை கடை உள்ளது. இந்த கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாதவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முகமது சபியுல்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாதவரம் காவல் நிலைய எஸ்ஐ ஜெய்சங்கர் மற்றும் போலீசார் செல்போன் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்கு பதிந்து செல்போன் கடை உரிமையாளரான அசோக்கை கைது செய்து, மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.