திருவொற்றியூர், ஆக.19: திருவொற்றியூர் விம்கோ நகர் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 படித்த தனுஷ்(17) என்ற மாணவன் கடந்த 14ம் தேதி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே காலி மைதானத்தில் சக மாணவர்கள் தனுஷ் அடித்து கொலை செய்தனர்.
இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து 12 மாணவர்களை கைது செய்து செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சில மாணவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் தலைமறைவாக இருந்த பல சிறுவர்களை தனிப்படை போலீசார் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் 4 மாணவர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனனர்.




