மாதவரம், ஆக.19: மாதவரம் தபால்பெட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாதவரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது 1 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து, போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர்கள் பிரபல ரவுடிகளான மாதவரம் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரூபேஷ்(29), மாதவரம் டிமான்ட் காலனியை சேர்ந்த பெர்ரிலூக் ப்ரீமேன்(48), மாதவரத்தைச் சேர்ந்த ஜெயவாணன்(எ) நானா(35) என தெரியவந்தது.
இதில் ரூபேஷ் கடந்த ஆண்டு மாதவரத்தில் நடந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், நானா என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



