Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு

சென்னை, டிச.18: இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: மாநகர் போக்குவரத்து கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜூன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வரும் டிச. 21ம் தேதி முதல் டிச.31ம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதிதாக பெற இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்று (ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை, இதர) மற்றும் 2 வண்ண புகைப்படங்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று தற்போது புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்கள் அடையாள அட்டையுடன் தங்களின் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ அளவிலான ஒரு புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர், பட்டினப்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, சைதாப்பேட்டை பேருந்து நிலையம், மத்திய பணிமனை, சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, கிண்டி எஸ்டேட், அய்யப்பன் தாங்கல், வடபழனி, கே.கே.நகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிளாம்பாக்கம் உள்பட 42 மையங்களில் வழங்கப்படும்.