தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி கொக்கைன் பறிமுதல்; விமான நிலையத்தில் கென்யா இளைஞர் கைது

சென்னை, செப். 18: ஆப்பிரிக்க நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்து வந்த கொக்கைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கென்யா நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியான இளைஞரை கைது செய்து விசாரிக்கின்றனர். ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர், அடிஸ் அபாபாவில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்தது.

Advertisement

விமானத்தில் பெருமளவு போதைப்பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, ரகசியமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். இந்நிலையில் அந்த குறிப்பிட்ட பயணிகள் விமானம் சென்னையில் வந்தது. அதில் வந்த பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கி, வெளியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 28 வயது இளைஞர் ஒருவர், சுற்றுலா பயணி விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அதில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். உடனே அவரை சென்னை விமான நிலையத்தில் ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, தீவிரமாக விசாரித்தனர். அதோடு அவருடைய உடைமைகளை சோதித்த போது, சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அந்த சாக்லேட் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது, கொக்கைன் போதை பொருளை, சாக்லேட் போல் தயார் செய்து மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். கென்யா நாட்டு இளைஞரிடம் இருந்து 2 கிலோ கொக்கைன் போதை பொருளை, மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடி.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், கென்யா நாட்டு இளைஞரை கைது செய்து, போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனர். பிறகு சென்னை தியாகராயர் நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, மேலும் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், ஆப்பிரிக்க நாட்டில் இருந்து ரூ.20 கோடி மதிப்புடைய 2 கிலோ கொக்கைன் போதை பொருள், கடத்திக் கொண்டு வந்த கென்யா நாட்டு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement