மகன் படிக்காமல் ஊர் சுற்றியதால் தாய் தூக்கிட்டு தற்கொலை
வேளச்சேரி, நவ.15: வேளச்சேரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் பானுமதி (38). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கணவர் பிரிந்து சென்றதால், மகன், மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் பானுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், பானுமதியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் தனது மகன், கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதுகுறித்து மகனிடம் பானுமதி கேட்டு திட்டியுள்ளார். இதனால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பானுமதி தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.