தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாடிக்கையாளரை கடிக்க பாய்ந்ததால் தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது

சென்னை, நவ.15: மயிலாப்பூர் பஜார் சாலையில் மோகன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இங்கு, டீ குடிக்க நேற்று முன்தினம் மதியம் முதியவர் ஒருவர் வந்துள்ளார். அப்போது தெருவில் சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று முதியவரை விரட்டி கடிக்க பாய்ந்தது. இதை கவனித்த டீக்கடை உரிமையாளர் மோகன், நாயை விரட்டி முதியவரை காப்பாற்றினர்.  அப்போது மோகனையும் தெரு நாய் கடிக்க பாய்ந்தது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த மோகன் கடையில் இருந்த உருட்டு கட்டையை எடுத்து நாயை கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் நாய் துடிதுடித்து உயிரிழந்தது. பிறகு நாய் உடலை அருகில் உள்ள குப்பை தோட்டியில் வீசினார். இதை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது, வைராக பரவியது.

இதுகுறித்து திருவான்மியூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கீர்த்தனா சம்பவம் குறித்து வீடியோ கட்சிகளுடன் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் பஜார் சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த போது, டீக்கடை உரிமையாளர் தெரு நாயை கொடூரமாக அடித்து கொன்றது உறுதியானது. அதைதொடர்ந்து, டீக்கடை உரிமையாளர் மீது 325 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 

Advertisement

Related News