பெரம்பூர், ஆக.14: சென்னை கொளத்தூர் மக்காரம் தோட்டம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நண்டு (42). திருமணமாகாத இவர் பெயின்டிங் வேலை செய்து வீட்டில் தனியாக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு முழு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நண்டு, கட்டிலில் மயங்கிய நிலையில் படுத்து கிடந்தார். தற்செயலாக வீட்டின் உரிமையாளர் மணிகண்டன் கதவு திறந்து கிடப்பதை பார்த்து வீட்டிற்குள் சென்று நண்டுவை எழுப்பியுள்ளார்.
ஆனால் நண்டு சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து, அவர்கள் வந்து பரிசோதனை செய்தபோது நண்டு ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.



