திருவொற்றியூர், ஆக.14: திருவொற்றியூரில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிக்கான இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டது. திருவொற்றியூர் மண்டலத்தில் மழைக்காலத்தில் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடிய மழைநீர் அகற்றும் மோட்டார்கள், மரக்கிளைகள் வெட்டும் இயந்திரங்கள், வாகனங்கள் போன்றவை முன்னெச்சரிக்கையாக சரிபார்க்கும் பணி நேற்று மண்டல அலுவலகத்தில் நடந்தது.
இதில், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, உதவி ஆணையர் சங்கர், செயற்பொறியாளர் பாண்டியன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து இயந்திரங்களும் தடையில்லாமல் இயங்கவும், மழைக்காலம் துவங்குவதற்கு முன் அனைத்து உபகரணங்களையும் தயார் நிலையில் வைப்பது குறித்தும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.



