Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குட்கா, கஞ்சா வழக்கில் 3 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது

பெரம்பூர், ஆக.14: பேசின் பிரிட்ஜ் போலீசார் நேற்று புளியந்தோப்பு காந்திநகர் 4வது தெருவில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். இதில் அந்த வீட்டில் ஒன்றரை கிலோ மாவா எனும் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தயார் செய்து விற்ற ஜெகன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே குட்கா வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து ஜெகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று வியாசர்பாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட கக்கன் ஜி காலனியில் கடந்த 1ம் தேதி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 பேர் கைதானநிலையில் தலைமறைவாக இருந்த புளியந்தோப்பு பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சுதாகர் (29) என்பவரை வியாசர்பாடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மக்களை அச்சுறுத்திய கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை நேற்று காலை கொடுங்கையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.