Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கம்ப்ரஸர் கேபிள் தாக்கி ரயில் பயணிகள் காயம்

ஆலந்தூர், ஆக.13: கிண்டி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக இரவும் பகலுமாக ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதலாம் நடைமேடையில் நடைபெறும் மேம்பாட்டு பணியின்போது டிரில்லிங் மிஷின் கொண்டு துளைபோடும் பணி நடந்து வந்தது. அப்போது, மிஷினில் இருந்து டிராக்டரில் பொருத்திய கம்ப்ரஸர் கேபிள் தளர்ந்து வெளியேறி தாறுமாறாக இங்கு அங்குமாக பாம்பு போல பாய்ந்தது.

இதில் ரயிலுக்கு காத்திருந்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சதீஷ், (40), சசிகுமார், (48) ஆகியோர் மீது கேபிள் பலமாக தாக்கியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனே, பணியில் ஊழியர்கள் ஓடி வந்து காயமடைந்த பயணிகளை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.