ஆலந்தூர், ஆக.13: நங்கநல்லூர் 32வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருபவர் பாஸ்கர் (73). இவர் நேற்று மாலை தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி வந்து பார்த்தார். அப்போது வீட்டிலிருந்து கரும்புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உடனடியாக பழவந்தாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
உடனே பழவந்தாங்கல் போலீசார், வேளச்சேரி தீயணைப்பு படை வீரர்களுடன் விரைந்து வந்து கதவை உடைத்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதில் வீட்டிலிருந்த ஏசி பெட்டி, டிவி, குளிர்சாதன பெட்டி மற்றும் ஷோபா தீக்கிரையானது. தீ விபத்து குறித்து பழவந்தாங்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



