Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குற்ற வழக்குகளில் 2 ரவுடிகள் கைது

பெரம்பூர், ஆக.13: அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால்(60). இவர் நேற்று பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை வழியாக சென்றபோது மர்ம நபர் ஒருவர் மிரட்டி பணம் பறித்து சென்றார். இதுகுறித்து, வேணுகோபால் கொடுத்த புகாரின் பேரில் வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த திவாகர்(22) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(எ) பகா சரவணன்(46). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. வியாசர்பாடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்கில் இவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, நீதிமன்றம் சரவணனை பிடிக்க பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.