Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வரும் 14, 15ம் தேதிகளில் தலைமை செயலக பகுதியில் டிரோன்கள் பறக்க தடை

சென்னை,ஆக.12: சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வரும் 15ம் ேததி தலைமை செயலகத்தில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வர் கொடியேற்ற உள்ளார். 2023ம் ஆண்டு பிஎன்எஸ் பிரிவு 163ன் கீழும், 2023ம் ஆண்டு பிஎன்எஸ்எஸ் பிரிவு 14ன் உட்பிரிவு(2)கீழும் டிரோன்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் எர்கிராப்ட், பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேங் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகர காவல் எல்லையில் கடந்த ஜூன் 19 முதல் ஆகஸ்ட் 17ம் தேதி வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

எனவே பாதுகாப்பு அலுவலின் பொருட்டு, சென்னையில் வரும் 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்களிலும் (அரசு ஏற்பாடுகள் தரவி) தலைமை செயலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், முதல்வர் இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் வரையிலும் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு எந்த விதமான பொருட்களும் பறக்கவிட தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.