பெரம்பூர், ஆக.8: வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் 40 வயது நபர். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 15 வயது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக சிறுமி பள்ளிக்கு சென்று வரும்போது, அருண் என்பவர் சிறுமியை வழிமடக்கி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
மேலும், காதலிக்கமறுத்தால் முகத்தில் ஆசிட் ஊற்றுவேன், என்று மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், வியாசர்பாடி, சஞ்சய் நகர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவை சேர்ந்த மெக்கானிக் அருண்குமார் (21) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




